குரங்கு கையில் 500 ரூபாய் நோட்டுகள் - சுற்றுலா பயணியின் பணத்தை தூக்கிச்சென்றதால் பரபரப்பு

அட்டகாசம் செய்துகொண்டிருந்த குரங்குகளில் ஒன்று சுற்றுலா பயணி வைத்திருந்த பணக்கட்டுகளை தூக்கிச்சென்றது.
கொடைக்கானல்,
மஞ்சுமெல் பாய்ஸ் படம் வெளியானதை அடுத்து குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் கொடைக்கானலில் உள்ள குணா குகைக்கு சுற்றுலா வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் செலவிற்காக 500 ரூபாய் நோட்டுக்கட்டுகளை வைத்திருந்தனர். அப்போது அங்கு அட்டகாசம் செய்துகொண்டிருந்த குரங்குகளில் ஒன்று சுற்றுலாபயணி வைத்திருந்த பணக்கட்டுகளை தூக்கிச்சென்றது.
இதனையடுத்து மரத்திற்கு மேல் இருந்த குரங்கு ஒவ்வொரு நோட்டாக தூக்கி வீசியது. இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் குரங்கின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா பயணிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
Related Tags :
Next Story






