சிவப்பு ஆடையில் வந்து சக்தி மாநாடு நடத்த கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி


சிவப்பு ஆடையில் வந்து சக்தி மாநாடு நடத்த கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி
x

திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

சட்டசபையின் கேள்வி-பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி: பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் முருகன் மாநாடு நடத்தி பக்தர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டது போல சமத்துவம் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சக்தி மாநாடு நடத்தி சமத்துவம் பேணப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் சேகர பாபு: திராவிட மாடல் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் சக்திகள் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் என்பதை உறுப்பினர் நன்றாக அறிவார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இருளைப் போக்கி ஒளி தருகின்ற வழிபாடு என கருதப்படும் திருவிளக்கு பூஜையை முதன் முதலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனோடு இணைந்து முத்தாரம்மன் கோவிலில் தீப ஒளி ஏற்றுகின்ற பவுர்ணமி திருவிழா நடத்தப்பட்டது.

அது தற்போது 20 திருக்கோவில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 58 ஆயிரத்து 600 பேர் திருவிளக்கு பூஜையில் பலனடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஆன்மீக பயணம் என்ற பயணத்தை ஏற்படுத்தி 1,031 சக்திகள் ஆன்மீக பயணத்தில் பலன் அடைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 60,000 சக்திகள் பலனடைந்து இருப்பதால் சக்தி மாநாடு என்ற ஒன்று தனியாக தேவைப்படவில்லை என்று பதிலளித்தார்.

சக்தி மாநாடு நடத்த கோரிக்கை வைத்த சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி சிவப்பு நிற ஆடை அணிந்திருந்து குறிப்பிடத்தக்கது.


Next Story