மேட்டுப்பாளையம்: ஊருக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை


மேட்டுப்பாளையம்: ஊருக்குள் புகுந்து நாய்க்குட்டியை கவ்விச்சென்ற சிறுத்தை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 12 Nov 2024 8:26 AM IST (Updated: 12 Nov 2024 10:11 AM IST)
t-max-icont-min-icon

நாய்க்குட்டியை சிறுத்தை கவ்விச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கோவை,

மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட சென்னாமலை கரடு வனப்பகுதி ஓரத்தில் மோத்தேபாளையம் கிராமம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சம்பவத்தன்று இரவில் மோத்தேபாளையம் கிராமத்துக்குள் சிறுத்த புகுந்தது.

தொடர்ந்து மோகன்குமார் என்பவரது வீட்டு சுற்றுச்சுவரை தாண்டி குதித்து உள்ளே புகுந்த சிறுத்தை, அங்கிருந்த நாய்க்குட்டியை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்கு சென்றது. இது அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதை அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர்.


Next Story