மனோஜ் பாண்டியன் வைத்த கோரிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்

சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென்று மனோஜ் பாண்டியன் கோரிக்கை வைத்தார் .
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்விநேரத்தின் போது, சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென்று சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன்கோரிக்கை வைத்தார் .
இந்த நிலையில், மனோஜ் பாண்டியனின் கோரிக்கையை ஏற்று பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது,
சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் , திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். உறுப்பினர் அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று இந்தப் பேரவையில் தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்தார் .
Related Tags :
Next Story