கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்த லாரி.. தண்ணீரில் மிதக்கும் சிலிண்டர்கள்

லாரி கவிழ்ந்ததில், அதில் இருந்த சிலிண்டர்கள் ஏரியில் விழுந்து மிதந்தன.
திருவண்ணாமலை,
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது பனிமூட்டம் காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த ஏரிக்கரையோரம் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், லாரியில் இருந்த பல சிலிண்டர்கள் ஏரியில் விழுந்து மிதந்தன. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ஏரியில் மிதந்த சிலிண்டர்களை அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story