காந்தியடிகளின் தியாகத்தை போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்


காந்தியடிகளின் தியாகத்தை போற்றுவோம்: டி.டி.வி. தினகரன்
x

மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம். என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

பிறப்பிலேயே தான் ஒரு ஜனநாயகவாதி என பிரகடனப்படுத்தி, இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் வலிமையோடு நிமிர்ந்து நிற்கச் செய்த தேசத்தந்தை, ஆங்கிலேயர்களின் ஆட்சியை அடியோடு அகற்றிய சுதந்திர போராட்ட தியாகி மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம் இன்று.

பொதுநலச் சேவைக்காக சத்தியாகிரகத்தையும், ஒத்துழையாமை இயக்கத்தையும் சுதந்திர போராட்டத்தில் புகுத்தி வெற்றி கண்டதோடு, நாடு லட்சிய பூமியாக மாற வேண்டும் என்ற கொள்கை பிடிப்பு கொண்டிருந்த மகாத்மா காந்தியடிகளின் தியாகத்தை நினைவில் வைத்து போற்றுவோம். என தெரிவித்துள்ளார்.


Next Story