முதல்-அமைச்சராகும் கனவை விட்டு விடுங்கள் சீமான்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ


முதல்-அமைச்சராகும் கனவை விட்டு விடுங்கள் சீமான்: நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோ
x

தமிழ்நாடு உங்கள் (சீமான்) கையில் எப்போதும் சிக்காது என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கடுமையாக விமர்சித்து நடிகை விஜயலட்சுமி அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் நேற்று நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது:-

வந்தாச்சு மீண்டும் மிஸ்டர் சீமான்.. ரொம்ப உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவன் என்று கூறி இருக்கிறார் சீமான். அப்போ நான் என்ன இந்தி அப்பா அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா அம்மாவுக்கு பிறந்தவள்தான். ஒண்ணும் இல்ல மிஸ்டர் சீமான்..

அடுத்து என்னை முதல்-அமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீங்களே.. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் கிளாரிட்டி கொடுங்க.. அதன்பிறகு உங்களை முதல்-அமைச்சர் ஆக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள். போன வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் வங்கிக் கணக்கில் ரூ. 50,000 போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூடாது, நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியக்கூடாது, மீடியாவுக்கு தெரியக்கூடாது, தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க டார்ச்சர் செய்தீர்களே..

அதையெல்லாம் தாங்க முடியாமல் தானே நான் வழக்கு கொடுத்தேன். அதையெல்லாம் மறைத்துவிட்டு, என் பெயரைக் கெடுக்க திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கிறது என பச்சைப் பொய் சொன்னீர்களே.. அவ்வளவுதானா உங்க யோக்கியதை? வெறும் 50,00 ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம் எனக்கு ரூ. 1 கோடி கொடுத்திருக்கிறாராம். அதை என்னவென்று கேட்காமல்.. ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டா என்று நினைத்து, உங்க மனைவி முன் நின்று, 'பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்' என்று சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை?.

இதையெல்லாம் பார்த்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதல்-அமைச்சர் ஆக்கப்போகிறார்களா? உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்காது. அப்படி சிக்கிறதுக்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் யாரும் விடவும் மாட்டார்கள். ஓகேவா, எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மா விடாது.. அதைபோல என்னோட அக்கா கண்ணீர் உங்களை என்னைக்கும் சும்மா விடாது. இவ்வாறு வீடியோவில் நடிகை விஜயலட்சுமி ஆவேசமாக பேசியுள்ளார்.


Next Story