உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து
உழவர் திருநாளை முன்னிட்டு விவசாயிகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னை,
உழவர் திருநாளையொட்டி மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"உழுவார் உலகத்தார்க்கு ஆணி அதாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து."
என்ற வள்ளுவனின் வாக்குப்படி, உலக உயிர்கள் அனைத்திற்கும் உழுது உணவளித்து மனித இனம் வாழ அச்சாணியாக அயராது உழைத்து உயிரூட்டி வரும், விவசாயப் பெருமக்களுக்கு என்றும் மகிழ்வும், உழைக்க ஆரோக்கியமும் கிடைத்திட வேண்டுகிறேன்.
உழவர் தினம் கொண்டாடும் விவசாயிகள் அனைவருக்கும், எனது உழவர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story