நாட்டின் உயரிய விருதுகள் பெறும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு எல்.முருகன் வாழ்த்து


நாட்டின் உயரிய விருதுகள் பெறும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு எல்.முருகன்  வாழ்த்து
x
தினத்தந்தி 3 Jan 2025 8:15 AM IST (Updated: 3 Jan 2025 10:27 AM IST)
t-max-icont-min-icon

கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளை பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

விளையாட்டு வீரர்களுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா, விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது . இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் 3 தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளை பெறும் தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

இந்தியாவின் விளையாட்டுத் துறையினருக்கு வழங்கப்படுகின்ற மிக உயரிய விருதான, 'மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா' விருது பெறுகின்ற, 'உலக செஸ் சாம்பியன்ஷிப்' பட்டம் பெற்ற, தமிழகத்தை சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷ் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

2024-ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்ற தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன் அவர்கள், நித்யஶ்ரீ சுமதி சிவன் அவர்கள், மனிஷா ராமதாஸ் அவர்கள் ஆகியோருக்கு, விளையாட்டு வீரர்களுக்கான 'அர்ஜுனா விருது' வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுடன், மூன்று வீராங்கனைகளுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், நாடு முழுவதும் இவ்விருது பெறுகின்ற அனைத்து வீரர் வீராங்கனைகளுக்கும், எனது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்..இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story