குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் பணம் திருட்டு


குமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் பணம் திருட்டு
x

கோப்புப்படம் 

பையில் இருந்த ரூ.84 ஆயிரம் மற்றும் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள வன்னியூர் கிருஷ்ண விலாசத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் பிள்ளை. இவருடைய மனைவி சுகன்யா குமாரி (வயது 75). இவர் சம்பவத்தன்று குழித்துறையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ.84 ஆயிரத்தை எடுத்து தனது பையில் வைத்தார். பின்னர், வீட்டிற்கு செல்வதற்காக குழித்தறையில் இருந்து களியக்காவிளை செல்லும் அரசு மகளிர் இலவச பஸ்சில் ஏறி உள்ளார். களியக்காவிளையில் இறங்க முயன்றார்.

அப்போது பை பிளேடால் கிழிக்கப்பட்டு அதில் இருந்த ரூ.84 ஆயிரம் மற்றும் வங்கி காசோலை புத்தகம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்ம நபர் சுகன்யா குமாரி பணத்தை எடுத்து வருவதை நோட்டமிட்டு திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுகன்யா குமாரி களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள்.


Next Story