கிருஷ்ணகிரி: தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம் - மாவட்ட ஆட்சியர்

கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் வரும் மே மாதம் 15ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் அனைத்து கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகை அமைப்பதை உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அனைத்து நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைப்பது தொடர்பான வழிமுறைகளை கடைப்பிடித்திட வேண்டும்.
நிறுவனங்கள் தங்கள் பெயர் பலகைகளை மே 15க்குள் தமிழில் வைத்திட வேண்டும். அதன் பிறகும் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story