மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது தொகை ரூ.5 லட்சமாக அதிகரிப்பு
கோட்டை அமீர் விருது தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
சென்னை:
2001-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு சிறப்பாக சேவை செய்து வரும் ஒரு நபருக்கு குடியரசு தின விழாவில் முதல்-அமைச்சரால் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. இவ்விருதானது 3/3" விட்டம் அளவுள்ள வெள்ளியில் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்ட ரூ.9,000/- மதிப்புடைய பதக்கம், ரூ.25,000/-க்கான பரிவுத்தொகை மற்றும் நற்சான்றிதழ் கொண்டதாகும்.
இந்நிலையில், 2025-ஆம் ஆண்டு முதல் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும் கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.25,000/-த்திலிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அதன்படி கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கத்திற்கான பரிவுத்தொகையினை ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story