கச்சத்தீவு திருவிழா; பக்தர்களை வழியனுப்பி வைத்த ராமநாதபுரம் கலெக்டர்


கச்சத்தீவு திருவிழா; பக்தர்களை வழியனுப்பி வைத்த ராமநாதபுரம் கலெக்டர்
x
தினத்தந்தி 14 March 2025 2:33 PM (Updated: 14 March 2025 2:35 PM)
t-max-icont-min-icon

கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த பக்தர்களை கடலோர காவல் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ராமநாதபுரம்

இந்தியா-இலங்கை பக்தர்களின் பாரம்பரிய உறவுத் திருவிழாவாகக் கருதப்படும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று மற்றும் நாளை (மார்ச் 14, 15) நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட பிஷப் அழைப்பு விடுத்தார்.

இந்த ஆண்டு கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 414 பேர் பங்கேற்கின்றனர். திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த பக்தர்களை கடலோர காவல் படை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் படகுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.


Next Story