கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி; உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

தவெக தலைவர் விஜய் நேற்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
Live Updates
- 28 Sept 2025 1:09 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 39 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவின் (வயது 31) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்றி உயிரிழந்தார். இதன் மூலம் கரூர் கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள் , 17 பெண்கள், 13 ஆண்கள் என 40 பேர் உயிரிழந்தனர்.
- 28 Sept 2025 12:06 PM IST
கரூரில் தவெக தலைவர் விஜய் நேற்று மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- 28 Sept 2025 11:32 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் - தவெக தலைவர் விஜய்
- 28 Sept 2025 10:39 AM IST
கரூர் கூட்ட நெரிசல்: தமிழக அரசிடம் அறிக்கை கேட்ட கவர்னர்
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை கேட்டுள்ளார்
- 28 Sept 2025 8:51 AM IST
கரூர் கூட்ட நெரிசல் - திரைப்பிரபலங்கள் இரங்கல்
கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர்.
- 28 Sept 2025 8:12 AM IST
கரூரில் இன்று கடைகள் அடைப்பு - வணிகர் சங்கம் அறிவிப்பு
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் இன்று கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
- 28 Sept 2025 8:10 AM IST
கரூர் அரசு மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை
கரூர் மருத்துவமனைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்றுள்ளார். அவர் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.
- 28 Sept 2025 8:09 AM IST
‘இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை’ - கரூர் எம்.பி. ஜோதிமணி
கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-
“கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.
கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.










