முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்


முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
x

சென்னையில் நேற்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த கட்சிப் பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 மாநில முதல்-மந்திரிகள், பல்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டுக்குழு கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை மறைக்கவே பிற மாநில தலைவர்களை அழைத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்துமுதல்-அமைச்சர் பேசியுள்ளார்.தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் பேசியிருக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை.தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 More update

Next Story