அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு: உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்


அலங்காநல்லூரில் இன்று  ஜல்லிக்கட்டு:  உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 16 Jan 2025 3:24 AM IST (Updated: 16 Jan 2025 6:46 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர், காளைக்கு, கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

மதுரை,

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகை தினமான செவ்வாய்க்கிழமை அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் நாளில் பாலமேட்டிலும் நடைபெற்றது.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று நடக்கிறது. தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த ஜல்லிக்கட்டுக் காளைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பது, பார்வையாளர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பையும், விறுவிறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது. நடப்பாண்டு 1,000 காளைகள், 750 மாடுபிடி வீரர்கள் போட்டியில் களம் இறங்குகின்றனர்.

போட்டியை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி வைக்கிறார். இதற்காக நேற்று இரவு அவர் மதுரை வந்தார். போட்டியை காண நேற்று இரவில் இருந்தே வெளியூர்களில் இருந்து வந்த பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவியத்தொடங்கினர்.


Next Story