நாம் தமிழர் கட்சியில் இருந்து ஜெகதீச பாண்டியன் விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்றும், தன் மீது அவதூறு பரப்புகின்றனர் என்றும் ஜெகதீச பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவறவிட்டுவிட்டார் என்றும், வலதுசாரி சிந்தனையோடு இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
Related Tags :
Next Story