'திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது' - இயக்குநர் அமீர்


திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது - இயக்குநர் அமீர்
x

திருமாவளவனை தனிமைப்படுத்த நினைப்பவர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்து அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட வீடியோவில், "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரசாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் அமீர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வலிமை இழக்கச் செய்து திருமாவளவனை தனிமைப்படுத்த நினைக்கும் அரசியல் புரோக்கர்களை எதிர்த்து களமாட வேண்டிய நேரம் இது. மக்களுக்கு தெரியாமல் மன்னரை உருவாக்கியவர் தனக்கு பதவி கிடைக்கவில்லை என்றவுடன் மக்களிடம் பிரசாரம் செய்ய போவதாக வீடியோ வெளியிடுகிறார். என்ன கொடுமை சார் இது" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story