ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது - விஜய்

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இன்று மதியம் விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் இருந்த 242 பயணிகளில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விமான விபத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "242 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்." என அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






