வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்


வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகம் முழுவதும் குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை - அரசு தகவல்
x

கோப்புப்படம் 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது.

சென்னை,

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் ரூ.58 கோடியே 33 லட்சம் மதிப்பில் கடப்பாக்கம் ஏரி மற்றும் ரூ.37 கோடியே 11 லட்சம் மதிப்பில் 41 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 6,120 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் தூய்மை பணியை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

மீட்புப்பணிக்காக 103 படகுகள் தயார் நிலையில் உள்ளன. 15 மண்டலங்களில் கழிவுநீரகற்றும் பணியில் 2,149 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பில் உள்ள 113 ஆய்வகங்களில் தினசரி சுமார் 4,500 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து கிராமத்திலும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் வீட்டிணைப்பு குழாய்களில் குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story