தொழில்நுட்பக்கோளாறு: சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்


தொழில்நுட்பக்கோளாறு: சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்
x
தினத்தந்தி 16 Nov 2024 10:32 AM (Updated: 26 Nov 2024 10:02 AM)
t-max-icont-min-icon

தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணிகள் விமானம் சென்னையில் அவசர அவசரமாக தரையிறங்கியது.

சென்னை,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானத்தில் 169 பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், விமானம் நடுவானில் திருப்பதி வான் எல்லை அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர், பயணிகள் அனைவரையும் மாற்று விமானம் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story