சென்னை விமான நிலையத்திற்கு அவசர ஊர்திகள் அதிகரிப்பு

சென்னை விமான நிலையத்திற்கு அவசர ஊர்திகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்து உள்ளது. தினமும், 50,000க்கும் மேற்பட்ட பயணியகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு புதிதாக 2 அதிநவீன தீயணைப்பு வாகனங்கள், நவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 4 புதிய அவசர ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் கொடியசைத்து செயல்பாட்டுக்கு இயக்கி வைத்தார்.
இதன்மூலம் விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை 9-ஆகவும், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை 6 ஆகவும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story