குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Nov 2024 11:52 AM IST (Updated: 1 Nov 2024 11:59 AM IST)
t-max-icont-min-icon

அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முன்னதாக சமீபத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பணிகள் குளிக்க கடந்த 27ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு கனமழை பெய்ததால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். விடுமுறை தினத்தை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story