'200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் சொல்கிறேன்' - கனிமொழி எம்.பி.
200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் சொல்கிறேன் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று விஜய் கூறினார்.
இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு தி.மு.க. தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி, "தேர்தல் வெற்றி நமது கைகளில் இருக்கிறது என்ற உறுதியோடு பணியாற்றினால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதுபோல், 200 தொகுதிகளில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என நானும் இறுமாப்புடன் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story