'இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை' - கனிமொழி எம்.பி.

இந்தி தெரியாததால் தனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க.வினரின் குடும்பத்தை சேர்ந்தவர்களின் பிள்ளைகள் இந்தி படிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். யார் படிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. நான் இந்தி படித்ததில்லை. இந்தி படித்ததால் உங்களுக்கு மட்டும் எல்லாம் கிடைக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்தி படிப்பதால் என்ன கிடைக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. நானும் டெல்லியில் இருக்கிறேன். இந்தி தெரியாததால் எனக்கு எந்த கஷ்டமும் ஏற்படவில்லை."
இவ்வாறு கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
Related Tags :
Next Story