நடிகர் மனோஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன் - எடப்பாடி பழனிசாமி

நடிகரும், இயக்குநருமான மனோஜ் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனும், திரைப்பட நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மகனை இழந்து ஆற்றொண்ணா துயரில் வாடும் பாரதிராஜா அவர்கள் இத்துன்பத்தில் இருந்து மீண்டு வரும் வலிமையை அளிக்க இறைவனை வேண்டுவதுடன், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story