அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன் பேட்டி


அ.தி.மு.க.வில் நான் சாதாரண தொண்டன் - செங்கோட்டையன் பேட்டி
x

கோப்புப்படம் 

அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

திருச்சி,

அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அவருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே உரசல்கள் இருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தொகுதி வாரியக பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது முதலிய பணிகளை மேற்கொள்ள அ.தி.மு.க.வில் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி, அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக அமைந்துள்ள 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அ.தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையனின் பெயர் இடம் பெறவில்லை. இது விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த சூழலில் திருச்சியில் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தொடர்ந்து வெற்றி பெற்ற தொகுதியான அந்தியூரில், சில துரோகிகளால் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என்று சொல்லி இருந்தேன். அந்தியூர் தொகுதியை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டுப் பேசினேன். அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் வெளிப்படையாகவே சிலர் எதிராக வேலை செய்தார்கள்.

அரசியல் கட்சியில் மூத்த தலைவர், இளைய தலைவர் என்றெல்லாம் கிடையாது. அமைதியாக அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லது. கட்சி வழக்குகள் தொடர்பான கேள்விகளுக்கு சி.வி.சண்முகம் பதிலளிப்பார். நாங்கள் பதிலளிப்பது இல்லை. கூட்டணி தொடர்பான கேள்விகளை பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டும். நான் சாதாரண தொண்டன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story