தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார்? - அண்ணாமலை கேள்வி


தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார்? - அண்ணாமலை கேள்வி
x

கோப்புப்படம் 

எல்லாருக்கும் தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடி

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், "என்னை சகோதரனாக நினைக்கும் அனைத்து தாய்மார்களின் குழந்தைக்கும் நான் தாய்மாமன்" என்று கூறினார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 'அங்கிள்' என்று குறிப்பிட்டு பேசினார்.

இந்த நிலையில் விஜய், முதல்-அமைச்சரை அங்கிள் என்று கூறுவதுபோல் அவரை பூமர் என்று சொன்னால் எப்படி இருக்கும் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எல்லாருக்கும் தாய்மாமன் என்று சொல்லும் விஜய் 50 வருஷமாக எங்கு போனார்? எத்தனை சகோதரிகளுக்கு சீர் கிடைத்தது? எத்தனை சகோதரிகளின் வீட்டில் விசேஷம் நடந்தது; அப்போது தாய்மாமன் எங்கு போனார்? இதே தாய்மாமன் நடித்த படத்துக்கெல்லாம் இலவசமாக டிக்கெட் கொடுக்கிறாரா? காசு வாங்கிக் கொண்டுதானே டிக்கெட் கொடுக்கிறார். தாய்மாமன் என்ற வார்த்தையை யோசித்துப் பயன்படுத்த வேண்டும்.

ஸ்டாலினை மாமா (அங்கிள்) என்கிறார். அவர் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனக்கு முதல்-அமைச்சர் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் மேடையில் பேசும்போது முதல்-அமைச்சரை மாமா என்கிறீர்கள். இது சினிமாவில் கேட்பதற்கு நன்றாக இருக்கும். விசிலடிப்பார்கள்; கைதட்டுவார்கள்.

அதே வார்த்தையை நாம் பயன்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? திமுக அமைச்சர்கள் யாராவது விஜய்யை பார்த்து பூமர்னு சொன்னால் எப்படி இருக்கும்? 51 வயதில் நீங்கள் பூமர் மாதிரி பேசுகிறீர்கள் என்று கூறினால் விஜய் மனசு கஷ்டப்படும் இல்லையா? சில வார்த்தைகளை சில இடங்களில் பயன்படுத்துவதற்கு முன்பு மக்கள் பக்குவத்தை எதிர்பார்க்கிறார்கள். பக்குவம் இல்லாமல் எப்படி முதல்-அமைச்சராக தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story