காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக நடமாட முடியும்? - டி.டி.வி. தினகரன்


காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக நடமாட முடியும்? - டி.டி.வி. தினகரன்
x

கோப்புப்படம் 

குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை

தமிழகத்தை கொலைக்களமாக மாற்றிவரும் தி.மு.க. அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக காவலர் முத்துக்குமார் அடையாளம் தெரியாத சில நபர்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

குற்றச்சம்பவங்களை தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக பொதுவெளியில் நடமாட முடியும்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் நாள் தவறாமல் நடைபெறும் கொலைச் சம்பவங்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தையும் கட்டுக்கதைகளையும் அடுக்கி அதன் பின்னால் மறைந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த படுகொலைக்கு என்ன கதை சொல்லப் போகிறார்?

எனவே, ஒவ்வொரு கொலை, கொள்ளைச் சம்பவத்திற்கும் காரணம் தேடி நேரத்தை வீணடிக்காமல், குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story