மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு புகழ் வணக்கம் - நயினார் நாகேந்திரன்

மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”தமிழர்களின் பாரம்பரிய கட்டடக்கலையை உலகமே வியந்து பார்க்கும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழா இன்று!
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, வடக்கே கங்கை, வங்காளம் முதல் பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதும் தன்னுடைய சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழப் பேரரசர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளையே நாம் “சதய விழா”வாகக் கொண்டாடுகிறோம்.
மிகப் பெரிய கடற்படையையும் ராணுவத்தையும் உருவாக்கி, மாலத்தீவு முதல் இந்தோனேசியா வரை கடல் கடந்து வெற்றி பெற்று ஆட்சி செய்த முதல் பேரரசர்!
இன்றைய தினத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






