சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


சென்னையில் கனமழை: முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் ஆய்வு
x

சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னை,

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது . இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது . குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது..கனமழையால் பல்வேறு இடங்களிலும் நீர் தேங்கியுள்ளது

இந்த நிலையில் ,சென்னையில் மழை வெள்ள மீட்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

கொளத்தூர் பகுதிக்குட்பட்ட யானைகவுனி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை பெய்து வரும் நிலையிலும் களத்தில் ஆய்வு மேற்கொண்டார்.யானை கவுனி பகுதியில் நடைபெறும் மழை வெள்ளம் வெளியேற்றும் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டு அறிந்தார். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னை பேசின் மேம்பாலத்தில் மழை நீர் அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மழை நீர் வெளியேற்றுதல் உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து டீக்கடையில் மு.க.ஸ்டாலின் தேநீர் அருந்தினார்.


Next Story