எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று தொடர்ந்து விசாரணை- ஐகோர்ட்டு உத்தரவு


எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று தொடர்ந்து விசாரணை- ஐகோர்ட்டு உத்தரவு
x

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார்.

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் உட்கட்சி பிரச்சினை தலை தூக்கியது. இதையடுத்து, பொதுக்குழுவை கூட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.இது கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த விதிகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி இவர்களது தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை ஐகோர்ட்டில் திருச்செந்தூரைச் சேர்ந்த அ.தி.மு.க. உறுப்பினர் வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். பொதுக்குழுவை கூட்டி கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். இந்தநிலையில், ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அவர்களை வழக்கு தொடர அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், என்.செந்தில்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வக்கீல் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததால், இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) தொடர்ந்து விசாரிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story