அரசு பள்ளி ஆசிரியை படுகொலை: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் - செல்வப்பெருந்தகை


அரசு பள்ளி ஆசிரியை படுகொலை: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் -  செல்வப்பெருந்தகை
x
தினத்தந்தி 20 Nov 2024 3:49 PM IST (Updated: 20 Nov 2024 4:28 PM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னை,

தஞ்சை அரசு பள்ளியில் 26 வயதாகும் ஆசிரியை ரமணி என்பவர் இன்று காலை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். அரசு பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் அரசு பள்ளி ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளியை உடனடியாக கைது செய்திருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது. குற்றவாளிக்கு சட்டத்தின்படி கடுமையான தண்டனை வழங்கவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

மகளை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார்.


Next Story