சென்னையில் வருகிறது அரசு மாட்டுக் கொட்டகை

கோப்புப்படம்
சென்னை மாநகராட்சி சார்பில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கு வழுக்காத தரைதளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வடிகால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான Trevis உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டு கொட்டகை அமைப்பதில் சென்னை மாநகராட்சி, மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சங்கங்களின் பங்களிப்புகளும் பொறுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story