சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி


சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக் கசிவு:  35 மாணவிகள் ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 25 Oct 2024 5:53 PM IST (Updated: 25 Oct 2024 9:39 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி ஆய்வகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

சென்னை,

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளியின் 3-வது தளத்தில் இருந்த மாணவிகளுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மயக்கம் அடைந்த 35 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திடீரென வாயு கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து மற்ற மாணவ, மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.காலை 10.30 மணி முதலே கெமிக்கல் வெளியேறியுள்ள நிலையில், அப்போதே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வகத்தில் இருந்து வாயு கசிந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் தேசிய மீட்புக் குழுவினர் ஆய்வு செய்துவிட்டு தற்போது வாயுக் கசிவு ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story