பூண்டு விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை


பூண்டு விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை
x
தினத்தந்தி 15 Nov 2024 2:09 AM IST (Updated: 15 Nov 2024 11:24 AM IST)
t-max-icont-min-icon

வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.

சென்னை,

கோயம்பேடு, மார்க்கெட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், காசி, மத்திய பிரதேசம் மற்றும் வேலி, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினசரி 150 டன் அளவிலான பூண்டு விற்பனைக்கு வருவது வழக்கம். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருவதால், தட்டுப்பாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களாகவே பூண்டு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்துக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த முதல் ரக பூண்டு தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை கடைகளில் ரகத்தைப் பொருத்து ஒரு கிலோ பூண்டு ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ. 450 முதல் ரூ. 550 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், பூண்டு விலையும் அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது. பூண்டு விலை மேலும் உயரும் என்று வியாபாரிகளில் ஒருசாரார் கவலை தெரிவித்துள்ளார்.


Next Story