காந்தி நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

காந்தியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை,
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 78வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திரு உருவ சிலைக்கு காந்தியவாதிகள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியின் உருவப்படத்துக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் காந்தியின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story