மண்டபம் முதல் ராமேசுவரம் வரை.. பாம்பன் புதிய பாலத்தின் வீடியோ வெளியீடு


மண்டபம் முதல்  ராமேசுவரம் வரை.. பாம்பன் புதிய பாலத்தின் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 6 April 2025 1:36 AM (Updated: 6 April 2025 2:09 AM)
t-max-icont-min-icon

மண்டபம் முதல் ராமேசுவரம் வரை பாம்பன் புதிய பாலத்தின் வீடியோவை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது.

பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்படுகிறது.

இதன்படி பாம்பன் புதிய ரெயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து, ராமேசுவரம்-பாம்பன் ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகையையொட்டி உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மண்டபம் முதல் ராமேசுவரம் வரையிலான பாம்பன் புதிய பாலத்தின் வீடியோவை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.


Next Story