மாமல்லபுரம் புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி


மாமல்லபுரம்  புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி
x

கோப்புப்படம்

ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாமல்லபுரம்,

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலக பாரம்பரிய வாரத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், தொல்லியல் துறையின் பராமரிப்பில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றும் கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு, கிருஷ்ண மண்டபம் மற்றும் வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட குடவரை சிற்ப வளாகங்களில், சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்கலாம் என மாமல்லபுரம் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.


Next Story