திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்


திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்
x

திமுக முன்னாள் எம்.பி இரா.மோகன் காலமானார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் சுங்கம், கருணாநிதி நகரில் வசித்து வந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 1989-ம் ஆண்டு சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இரா.மோகன் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story