கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்த ஆந்திர மாநில முன்னாள் மந்திரி
ஆந்திர மாநில முன்னாள் மந்திரி தேவேந்திர கவுடா கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
கன்னியாகுமரி,
ஆந்திர மாநில முன்னாள் உள்துறை மந்திரி தேவேந்திர கவுடா நேற்று கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டரில் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர் விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் தரை இறங்கியது. அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றொரு ஹெலிகாப்டரில் வந்திருந்தனர். பின்னர் அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கண்ணாடி நடை பாலம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் இங்கிருந்து ராமேசுவரம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக கன்னியாகுமரி வந்த அவரை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். முன்னாள் மந்திரி ஒருவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வந்தது பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story