ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் வெளியேற்றம்


ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் வெளியேற்றம்
x

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 2-வது தளத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் நள்ளிரவில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

இதன்படி 380க்கும் மேற்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை வளாகம் இருளில் மூழ்கியதாலும், புகை காரணமாகவும் நோயாளிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story