வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுப்பு


வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
x

வெம்பக்கோட்டை அகழாய்வில் மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

அகழாய்வில் இதுவரை ஆட்டக்காய்கள், சுடுமண் முத்திரைகள், செப்பு காசுகள், செவ்வந்திக்கல், மண்பாண்ட பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மைகள், ஆபரணங்கள் உள்பட சுமார் 2,600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு வளையல்கள், சுடுமண்ணால் செய்த அலங்கார மணிகள் நேற்று கிடைத்தன. மேலும் முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளைவிட 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், செப்புக் காசுகள் அதிகளவில் கிடைத்து உள்ளன. இந்த செப்புக்காசுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட இருப்பதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.


Next Story