தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் மகனை சரமாரியாக தாக்கிய தந்தை


தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் மகனை சரமாரியாக தாக்கிய தந்தை
x

தனக்கு தெரியாமல் திருமணம் செய்ததால் மகனை சரமாரியாக தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே மேற்கத்தியனூர் பகுதியை சேர்ந்தவர் துளசி. இவரது மகன் சந்தோஷ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த இவரது தந்தை துளசி இது குறித்து மகனிடம் கேட்டு உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துளசி மகன் சந்தோசை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சந்தோஷ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து துளசியை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story