ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு


ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 14 Dec 2024 8:54 AM IST (Updated: 14 Dec 2024 11:58 AM IST)
t-max-icont-min-icon

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்தனர்.

இந்நிலையில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலை மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மியாட் மருத்துவமனையில் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென நேற்று இரவில் இருந்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story