4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை: திருமாவளவன் வேதனை


4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை: திருமாவளவன் வேதனை
x

விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டங்களை பேசுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

சென்னை


தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்திட்ட சட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக சமூக அமைப்புகள் மாநாடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். அதில், திருமாவளவன் பேசியதாவது: - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டம் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கெனவே கொண்டுவரப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் மூலம் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

இந்திய அரசமைப்பு முழுமையாக நடைமுறைக்கு வந்தால் இந்தியா சமத்துவ தேசமாகியிருக்கும். அரசியல் அதிகாரத்தில் இருப்பவருடன் இணைந்து தனக்கான உரிமையைப் பெறுவது சிறந்த நடைமுறை. 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றும்போதுதான் அதிகாரிகள் சட்டங்களை பேசுவார்கள். பேனர் வைத்தால் அதை அகற்றிவிடுவார்கள். இதனால் அரசியல் ரீதியாக வலிமை அடைய வேண்டிய தேவை இருக்கிறது. இது போதாது என்ற போதாமையை காட்டுகிறது" என்றார்.


Next Story