ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அதிக தேர்தல்களில் போட்டியிட்டு சாதனை படைத்த மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் இந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 17-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

இன்று பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். தொடர்ந்து வருகிற 13-ந்தேதி மற்றும் 17-ந் தேதி ஆகிய நாட்கள் மட்டுமே வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய முடியும். மற்ற நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். 18-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்ப பெற 20-ந் தேதி கடைசி நாளாகும்.


Next Story