இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்

என்ஜினீயரிங் மாணவன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கீழமறவன் குடியிருப்பு சிவன் கோவில் தெருவை சேர்ந்த 17 வயது மாணவர் ஒருவர் தனியார் கல்லூரி ஒன்றில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஆத்தங்கரை மைதானத்தில் கிரிக்கெட் விளையாட சென்றார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் மாணவரை தாக்கியது. மேலும் பீர்பாட்டிலால் தலையில் அடித்ததோடு அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இந்த தாக்குதலில் மாணவனின் கை, கால், நெஞ்சு, முதுகு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. தாக்குதல் நடத்திய கும்பல் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதையடுத்து மாணவனை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மாணவன் அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டார் போலீசார் தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ஒருவரின் காதலியான இளம்பெண்ணை மாணவன் கிண்டல் செய்துள்ளான் என்பது இதன் காரணமாக மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாக உள்ள 4 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த 14 பேரும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் என போலீசார் தெரிவிடித்துள்ளனர். இளம்பெண்ணை கிண்டல் செய்த என்ஜினீயரிங் மாணவனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.