முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை


முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 23 Oct 2024 2:44 AM GMT (Updated: 23 Oct 2024 5:37 AM GMT)

ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

சென்னை,

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்தியலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார். தற்போது ஒரத்தநாடு எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார்.

இந்நிலையில் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டில் 11 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சட்டமன்ற விடுதி அலுவலகத்தில் உள்ள வைத்திலிங்கம் அறை மற்றும் மேலும் 4 இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-2016 ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக புகார் அளிக்கப்பட்டதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story