அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும் - ஓ.பன்னீர்செல்வம்


அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சி தொடரும் - ஓ.பன்னீர்செல்வம்
x

அதிமுகவை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ராமநாதபுரம்,

பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்குச் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள், தேவர் சிலைக்கு கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மூவரும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது;

”பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கின்றோம். அனைவரும் ஒருங்கிணைந்து ஒரே குடையில் நின்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவ வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறோம். பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால் மட்டுமே தி.மு.க. ஆட்சி மீண்டும் வரும் என்று கூறியதற்கு விளக்கம் அளித்து, “பிரிந்திருக்கும் அதிமுக சக்திகள் சேரவில்லை என்றால்தான் மக்கள் மீண்டும் திமுக ஆட்சியை தேர்தெடுப்பார்கள் என்று சொன்னேன்.. மீண்டும் திமுக ஆட்சி வரும் என்று நான் சொல்லவில்லை.” என்று கூறினார்.

1 More update

Next Story